Harni Organic Herbals
Organic Dry Herbs And Products
14/09/2026
14/09/2026
COD available…
26/08/2026
Available now
23/08/2026
Available now…
05/08/2026
‘ஒரு மூலிகையில் இரும்பு விளையும்’ என்று சொல்லுமளவுக்கு இரும்புச் சத்தை வாரி வழங்கும் ‘மூலிகை இயந்திரம்’ கரிசாலை! முதுமைக்கான அறிகுறிகளை எட்டிப்பார்க்க விடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வலிமையான மூலிகை இது. வயலோரங்களிலும் நீர்ப்பாங்கான இடங்களிலும் நிறைவாய்த் தென்படும் இந்தக் கற்ப மூலிகையைப் பற்றிய வள்ளலாரின் பதிவுகள் அதிகம். கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!
படர்ந்தும் சற்று நிமிர்ந்தும் வளரக்கூடிய சிறுசெடி. இலைகளின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிற மலர்கள், இனத்தைப் பிரித்துக் காட்டும். ‘அஸ்டரேசியே’ (Asteraceae) குடும்பத்தைச் சார்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா புரோஸ்ட்ரேடா’ (Eclipta prostrata). ‘விடிலோலேக்டோன்’ (Wedelolactone), ‘பீட்டா அமைரின்’ (Beta-amyrin), ‘லுடியோலின்’ (Luteolin) போன்ற முக்கியத் தாவர வேதிப்பொருட்கள் இதிலுள்ளன.
கோடைக்கால மதிய வேளைகளில், நீர்மோரோடு கரிசாலை இலைச் சாற்றைச் சிறிதளவு கலந்து பருக, உடல் குளிர்ச்சியடைவதோடு, வெப்பச் சோர்வைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் கிடைக்கும். துவரம் பருப்பு சேர்த்து சமைத்த ‘கரிசாலை-பருப்புக் கடையலை’ அவ்வப்போது சுவைத்துவர, உடல் தளர்வடையாமல் தேவைக்கேற்ப உழைப்பதோடு கண்பார்வையும் கூர்மையடையும்.
பசியை அதிகரித்து ஊட்டங்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் கரிசாலை உதவுகிறது. இதன் சாற்றுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து விழுங்க, தொண்டைவலி குணமாகும்; குடற் கிருமிகளையும் வெளியேற்றும். சுவாசப் பிரச்சினைகளுக்கான உணவாகக் கரிசாலையைப் பயன்படுத்தலாம். கரிசாலையின் பலன்களைப் பெற, இதன் சாற்றுடன் பனைவெல்லம் சேர்த்து, லேகிய பதத்தில் செய்து சுவையாகவும் சாப்பிடலாம். கொடம்புளியும் கரிசாலையையும் சம அளவு எடுத்து புன்னைக் காயளவு சாப்பிட்டுவர, மூல நோயின் தாக்கம் குறையும்.
கல்லீரல் செல்களுக்குப் புத்துயிர் அளித்து, ‘கல்லீரல் பாதுகாவலனாக’ செயல்படும் முக்கிய மூலிகை கரிசாலை என்று ஆய்வுகள் பதிவிடுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் (Immuno-stimulatory) படைத்தது கரிசாலை. ரத்தத்தில் கொழுப்பு வகைகள் அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்தும் ஆதாரமாகக் கரிசாலை செயல்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது. எதிர்-ஆக்ஸிகரணி தன்மை உடையதால், கரிசாலையை வைத்து பல்வேறு கற்ப மருந்துகள் வழக்கத்தில் உள்ளன. ‘பொற்றலை கையாந்தக்கரை பொன்னிறமாக்கும் உடலை…’ எனும் அகத்தியர் பாடலின் மூலம், மஞ்சள் கரிசாலை யின் மேன்மையை அறியலாம்.
குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலுக்கு, இதன் இலைச் சாறு இரண்டு துளியோடு தேன் சேர்த்துக் குழப்பி நாவில் தடவ, இயற்கையாய் இருமல் தணியும். இலைச் சாறு, நல்லெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்தே, அக்கால கிராமங்களில் இருமலுக் கான டானிக்! கரிசாலையை சூரணம் செய்து, இளநீரில் ஒரு மாதமும் தேனில் ஒரு மாதமும் உட்கொள்ள நரைதிரை மாறும் என்கிறது ‘தேரன் யமக வெண்பா’. இதன் இலைகளை மென்று சாப்பிட்டு வாய் கொப்பளிக்க, பல் ஈறு பலமடையும்.
‘அயச் செந்தூரம்’ எனும் சித்த மருந்தைக் கரிசலாங்கண்ணி சாற்றின் அனுபானத்தில் கொடுக்க, ரத்தக் குறைவு, உடல் வீக்கம் குணமாகும். ‘அயபிருங்கராஜ கற்பம்’ எனும் சித்த மருந்து, ரத்த சோகையில் சிறப்பாகச் செயல்படக் கூடியது. கரிசாலை, மிளகின் உதவியுடன் உருவாக்கப்படும் மாத்திரைகள், காமாலை, உடல் வீக்கத்துக்கான பாரம்பரிய மருந்து.
கரிசாலை சூரணத்தோடு திப்பிலி சூரணத்தைத் தேனில் குழைத்துக் கொடுக்க, சளி, இருமல் அமைதியடையும். கரிசாலை கற்ப மாத்திரை, கையான் எண்ணெய் என சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகளில் பயன்படும் கரிசாலை, சில வகையான காமாலைக்கான அற்புத மருந்து.
ஆமணக்கெண்ணெய், கரிசாலைச் சாறு, சிறிது பூண்டு சேர்த்து பதமாய்க் காய்ச்சி தயாரிக்கப்படும் மருந்து, பித்த நோய்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது. கரிசாலைச் சாறு, நெல்லிக்காய்ச் சாற்றின் உதவியுடன், நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் தலைமுழுகும் எண்ணெய்யை அவ்வப்போது பயன்படுத்த, உடலில் அதிகரித்திருக்கும் பித்தம் சாந்தமடையும்.
கண், காது நோய்களுக்கான மருத்துவ எண்ணெய்யும்கூட! உள்ளுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கரிசாலை மடக்குத் தைலம்’, தோல் முதல் உள்ளுறுப்புகள்வரை வலுவைக் கொடுக்கக்கூடியது. கரிசாலைச் சாறு, செம்பரத்தை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்த, கூந்தல் ஆரோக்கியத்துக்கு நீண்ட நாள் உத்தரவாதம் கிடைக்கும்.
11/04/2023
உயரிய மூலிகை மருத்துவ சிறப்புகளால், திருமருது என சங்ககாலத்தில் போற்றப்பட்ட மருத மரம், மனிதர்க்கு உடற்பிணி தீர்க்கும் அருமருந்தாக, சித்த மூலிகை மருத்துவத்தில் பயன் தருகிறது.
ஆற்றங்கரை மற்றும் வயல் ஓரங்களில் ஓங்கி உயரமாக வளரும் தன்மைகொண்ட செழிப்பான மரமான மருத மரத்தில் உள்ள பல வகைகளில், பெரும்பான்மை மரங்கள் மனிதருக்கு நன்மை தருவனவாகவும், சிலவகை மரங்கள் வீடுகளுக்கு வாசல் நிலைக்கதவுகள், ஜன்னல் கதவுகள் செய்யப் பயனாகின்றன. ஆயினும் தற்காலத்தில் வெகு அரிதாகவே, சில இடங்களில் மட்டும் காணப்படுகின்றன.
சிவந்த நிற மலர்களையும், வளவளப்பான பட்டைகளையும் கொண்ட, சிவந்த நிறமுடைய மருத மரத்தின் செழுமையான நிழலில் இளைப்பாற, உடல் அசதி மற்றும் பிணிகள் அகன்று, உடலில் நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.
தமிழகத்தின் கோயமுத்தூர் மாநகர் அருகே, மருதமரங்கள் நிறைந்து சோலைவனமாகத் திகழ்ந்த, தமிழ்க்கடவுள் குமரன் குடியிருக்கும் மலையே, மருதமலை என இன்றும் அழைக்கப்படுகிறது.
வைகை ஆற்றின் கரையோரம் மிக அதிக அளவில் காணப்பட்டதால், மருதத்துரை எனும் பெயரில் அழைக்கப்பட்ட அந்நாள் நகரமே, இன்று மருவி, மதுரை என வழங்கப்படுகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் தமிழர் வாழ்வில் பின்னிப்பிணைந்த மருத மரமே, மனிதர் உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருத்துவ மரமாக, உடல் வியாதிகளைப்போக்கும் அருமருந்தாகப் பயன் தருகிறது.
மருதம் பட்டைகளின் மருத்துவ குணங்கள்:
மருதம் பட்டைகள் வியாதி எதிர்ப்பு சக்தி அதிகம் நிரம்பியவை, அத்தகைய ஆற்றலால், உடலில் பல்வேறு முக்கிய உறுப்புகளில் ஏற்படும் புற்று வியாதிகள் அணுகாமல் உடலைக்காக்கும் வலிமை, மருதம் பட்டைக்கு இயல்பாக இருக்கிறது.
உடல் தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்பு போன்றவை அகல தீர்வாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது..சுவாச பாதிப்புகளால் உண்டாகும் காச வியாதிகளை போக்க, இந்த மரப்பட்டைகளை, பொடியாக்கி, நீரில் இட்டோ அல்லது பாலில் கலந்தோ தேநீராக பருகிவர, முழுமையாக சுவாச பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
சிறு நீரகத்தில் கற்கள் உண்டாகி, தாங்கமுடியாத அளவில் உடலுக்கு வலியையும் வேதனையையும் கொடுக்கும் ஒரு மோசமான வியாதியாக உருவெடுக்கிறது. அத்தகைய சிறுநீரக கற்கள் முற்றிலும் உடைந்து வெளியேறி, உடலின் வேதனைகள் தீர, மருதம் பட்டையை நீரிலிட்டு காய்ச்சி, தினமும் பருகிவர வேண்டும்.
இதய நோய்கள் ;
இதயம் தொடர்பான வியாதிகளுக்கு சிறந்த தீர்வாகிறது, மருதம் பட்டைகள். நன்கு பொடியாக்கிய மருதம் பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, குடிநீராக பருகிவர, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, இரத்த நாள அடைப்புகளை சரிசெய்து, இதய வியாதிகளை போக்குகிறது.
இன்று வயது வித்தியாசம் இன்றி, அனைத்து வயதினரையும் பாதித்து, சமயங்களில் உயிரையும் பறித்துவிடும் கொடிய வியாதியாக, மாரடைப்பு காணப்படுகிறது.
உடலின் இரத்த நாளங்களில், உணவு நச்சுக்களால் ஏற்பட்ட கொழுப்புகள் சேர்ந்து, அவற்றால் அடைப்பு ஏற்பட்டு, இதயத்தின் இரத்தம் சுத்திகரிக்கும் தன்மை பாதிப்படைகிறது. இத்தகைய அடைப்பை சரிசெய்யும் வல்லமை, மருதம் பட்டைக்கு உண்டு, இதயத்தை இந்த பாதிப்பிலிருந்து காத்து, இயக்கத்தை சீர்செய்யும் ஆற்றல் வெண் தாமரை மலருக்கு உள்ளது.
மருதம் பட்டை பொடி, வெண் தாமரை பொடி இரண்டையும் கலந்து தினமும் இருவேளை நீரில் கலந்தோ அல்லது பாலில் கலந்தோ தொடர்ந்து பருகிவர, இரத்த நாள அடைப்புகள் நீங்கி, இதயம் வலுவடைந்து, இரத்த ஓட்டம் சீராகும், இதுவரை அச்சுறுத்திய மாரடைப்பு பாதிப்புகள் நீங்கி, உடல் நலமுடன் வாழலாம்.
இந்த மருதம் பட்டை வெண் தாமரை பொடிக்கலவையை டீனேஜ் எனப்படும் வயதைக் கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும், சில காலம் தொடர்ந்து சாப்பிட்டுவர, எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை, அவர்கள் தவிர்த்துவிடலாம். அதோடு மட்டுமல்லாமல், இதய பாதிப்புகளை, இரத்த நாள அடைப்புகளை சரிசெய்ய, ஆஞ்சியோ உள்ளிட்ட எந்தவித அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய தேவை ஏற்படாமல், உடல் நலனை இயற்கை வழியே காத்துவரலாம்.
01/04/2023
மருது - Terminalia arjuna
කුඹුක්
பயன்கள்
இருதய நோய்.
இதய நோய் மற்றும் நெஞ்சு வலி.
உயர் இரத்த அழுத்தம்.
தேவையற்ற கொழுப்பு.
காது வலி.
வயிற்றுப்போக்கு.
சிறுநீர் பாதை நோய்கள்.
Disorders of the heart and blood vessels. (cardiovascular disease)
Including heart disease and related chest pain.
High blood pressure.
High cholesterol.
It is also used for earaches.
Dysentery.
Diseases of the urinary tract.
හෘද වාහිනී රෝග
හෘද රෝග සහ ඒ ආශ්රිත පපුවේ වේදනාව ඇතුළුව.
අධි රුධිර පීඩනය.
අධික කොලෙස්ටරෝල්.
එය කන් කැක්කුම සඳහා ද භාවිතා වේ.
අතීසාරය.
මුත්රා මාර්ගයේ රෝග.
Category
Telephone
Website
Address
Batticaloa
Alerts
Be the first to know and let us send you an email when Harni Organic Herbals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.